பழனி தண்டாயுதபாணி சுவாமி கோயிலின் டிசம்பர் மாத பூஜை மற்றும் தரிசன கட்டண வருவாய் ரூ. 8 கோடியை நெருங்கியது. பஞ்சாமிர்தம் ரூ.4.70 கோடிக்கு விற்பனையாகியுள்ளது.
மலைக்கோயிலில் சிறப்பு தரிசனம், காலபூஜை, புதுக்கணக்கு, தங்கத்தொட்டில் போன்றவற்றுக்கு கட்டணம் வசூலிக்கப்படுகிறது. இதில் கடந்த டிசம்பர் மாதம் திருக்கோயிலுக்கு ரூ. 7 கோடியே 92 லட்சத்து 59 ஆயிரத்து 176 கிடைத்துள்ளது. கடந்த ஆண்டுஇதே மாதத்துடன் ஒப்பிடும்போது 93 லட்சம் அதிகமாகும். அதே போல, தங்கத்தேர் புறப்பாட்டுக்கு ரூ. 2000 கட்டணமாக பெறப்படுகிறது. டிசம்பர் மாதத்தில் 2,179 பேர் தங்கத்தேர் புறப்பாடு செய்துள்ளனர். இதன் மூலமாக ரூ. 43 லட்சத்து 58 ஆயிரம் கிடைத்துள்ளது. மேலும், பஞ்சாமிர்தம் விற்பனை மூலம் ரூ. 4 கோடியே 70 லட்சத்து 33 ஆயிரத்து 610 கிடைத்துள்ளது. இது கடந்த ஆண்டைக் காட்டிலும் 38 லட்சம் அதிகமாகும்.
கடந்த டிசம்பர் மாதம் கார்த்திகையை முன்னிட்டு முருக பக்தர்கள் மற்றும் ஐயப்ப பக்தர்கள் அதிக அளவில் வந்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

No comments:
Post a Comment