Monday, 15 January 2018

தாராபுரம் சர்ச் ரோட்டில் போக்குவரத்து காவலர் நியமனம்

தாராபுரம், ஜன.11 –
தீக்கதிர் செய்தி எதிரொலியான தாராபுரம் சர்ச் ரோட்டில் போக்குவரத்து காவலர் மீண்டும் நியமனம் செய்யப்பட்டுள்ளார். தாராபுரம் சர்ச் ரோட்டில் அரசு நிதி உதவி பெறும் மகளிர் பள்ளி செயல்பட்டு வருகிறது. இப்பள்ளியில் கிராமப்புற மற்றும் நகர்புறத்தை சேர்ந்த 3 ஆயிரம் மாணவிகள் பயின்று வருகின்றனர். கிராமப்புற பகுதிகளில் இருந்து வரும் இம்மாணவிகள் தாலுகா அலுவலகம் அருகிலுள்ள பேருந்து நிறுத்தம் வந்து தங்களது கிராமங்களுக்கு பேருந்தில் ஏறி செல்கின்றனர். இதற்கிடையே போக்குவரத்து நெரிசல் மிகுந்த இப்பகுதியில் மாணவிகள் சாலையை கடக்க ஏதுவாக போக்குவரத்து காவலர்கள் போக்குவரத்தை கட்டுப்படுத்தி வந்தனர்.இந்நிலையில் இங்கு பாதுகாப்பிற்கு நிறுத்தப்பட்டிருந்த போக்குவரத்து காவலர்கள், மகளிர் காவலர் மற்றும் ஊர்க்காவல் படையினர் ஆகியோர் திடீரென திரும்பப் பெறப்பட்டனர். இதனால் பள்ளி மாணவிகள் வாகன நெரிசலால் பெரும் சிரமத்திற்கும், அச்சத்திற்கும் உள்ளாகி சாலையை கடக்க இயலாமல் நீண்ட நேரம் காத்திருக்கும் நிலை உருவானது. இதுகுறித்து தீக்கதிரில் கடந்த ஜன.4 ஆம் தேதியன்று செய்தி வெளியிடப்பட்டிருந்தது. இந்நிலையில் தீக்கதிர் செய்தியின் எதிரொலியாக தற்போது அப்பகுதியில் போக்குவரத்தை கட்டுப்படுத்த போக்குவரத்து காவலர் நியமிக்கப்பட்டுள்ளனர்.

Sunday, 14 January 2018

பொள்ளாச்சி தென்னந்தோப்புகள் மட்டும்தான் கண்ணுக்கு தெரியும்!’ - வெப்பக் காற்று பலூனில் ஓர் 'த்ரில்' 'ஜில்' பயணம்

ஊஷ்ஷ்ஷ்…. ஊஷ்ஷ்ஷ்… என்று தீப்பிழம்புகள் பீறிட்டு புறப்படத் தயாராக, காற்றைக் கிழித்துக் கொண்டு விண்ணில் பறக்கின்றன வெப்பக் காற்று பலூன்கள். வெளிநாடுகளில் இந்தக் காட்சிகள் மிகவும் சாதாரணமான ஒன்று. ஆனால், தமிழகத்துக்கு இவை புதிது. சுற்றுலாத்துறை மற்றும் தனியார் அமைப்புகள் இணைந்து, பொள்ளாச்சியில் 4-வது ஆண்டாக நடத்தும் சர்வதேச பலூன் திருவிழாவில்தான் இந்தக் காட்சிகள். தினசரி காலை, மாலை என்று இரண்டு வேளைகளும், பிரமாண்ட பலூன்கள் வானில் வட்டமடித்துக் கொண்டிருக்கின்றன.இந்த முறை உலகம் முழுவதும் இருந்து, 12 பலூன்கள் களமிறக்கப்பட்டுள்ளன. அவற்றில் நியூ என்ட்ரியாக எந்திரன் 2.0 பலூன் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இவற்றை டேக் ஆஃப் செய்வதற்காக, பல்வேறு நாடுகளைச் சேர்ந்த 24 பைலட்கள் பொள்ளாச்சிக்கு லேண்ட் ஆகியுள்ளனர். வருகின்ற 16-ம் தேதி வரை சக்தி மில்ஸ் மைதானத்தில் இந்தத் திருவிழா நடக்கிறது.

ரெய்டு அனுபவத்துக்காக, திருவிழா நடக்கும் மைதானத்துக்குச் சென்றோம். ஒரு பலூனில் பைலட்டுடன் சேர்த்து, 4 பேருக்கு மட்டுமே அனுமதி. அதிகாலை சூரிய உதயத்துக்கு முன்பே, பலூனை பறக்க விடுவதற்கான ஏற்பாடுகளில், பைலட்டுகளும், வாலன்டியர்ஸ்களாக உள்ள மாணவர்களும் இறங்கி விடுகின்றனர்.

Saturday, 13 January 2018

திருப்பூர் மாவட்டத்தில் ஐ.ஏ.எஸ். அகாடமி பயிற்சி மையம் அமைக்க நடவடிக்கை

திருப்பூர் மாவட்டத்தில் ஐ.ஏ.எஸ். அகாடமி பயிற்சி மையம் அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் கூறினார்.
ஜனவரி 14, 2018, 04:00 AMமுத்தூர்,

திருப்பூர் மாவட்டம் முத்தூர் அரசு மேல்நிலைப்பள்ளியின் 50-வது ஆண்டு பொன்விழா பள்ளி வளாகத்தில் நேற்று நடைபெற்றது. விழாவிற்கு மாவட்ட கலெக்டர் கே.எஸ்.பழனிசாமி தலைமை தாங்கினார். ஈரோடு எஸ்.செல்வக்குமாரசின்னையன் எம்.பி., முன்னிலை வகித்தார். மாவட்ட முதன்மை கல்வி அதிகாரி எஸ்.சாந்தி வரவேற்று பேசினார். விழாவில் தமிழக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் கலந்து கொண்டு பொன்விழா நுழைவு வாயில் மற்றும் சீரணி அரங்கம், பள்ளியின் சுற்றுச்சுவர் கட்டிடங்களை ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார். பின்னர் அவர் பேசிய தாவது:-தமிழகத்தில் உள்ள அனைத்து அரசு பள்ளிகளில் படிக்கும் ஏழை எளிய மாணவர்கள் முன்னேற்றம் அடைய தமிழக அரசு உரிய நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது. இதன் முதல் கட்டமாக பள்ளி கல்வித்துறையில் பல்வேறு மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. தமிழகத்தில் 12 ஆண்டுகளுக்கு பிறகு பள்ளிக்கல்வித்துறையின் சார்பில் அடுத்த ஆண்டு முதல் புதிய பாடத்திட்டம் அறிமுகப்படுத்தப்பட உள்ளது.

தமிழகத்தில் உள்ள அனைத்து மாவட்டங்களிலும் அந்தந்த மாவட்ட தலைநகரங்களில் கட்டணமில்லாமல் படிக்க ஐ.ஏ.எஸ். அகாடமி பயிற்சி மையங்கள் அமைக்கப்பட்டு வருகிறது. தற்போது அமைக்கப்பட்டுள்ள ஐ.ஏ.எஸ். அகாடமி பயிற்சி மையங்களில் 3 ஆயிரத்து 700 மாணவர்கள் பயிற்சி பெற்று வருகின்றனர். திருப்பூர் மாவட்டத்தில் ஐ.ஏ.எஸ். அகாடமி பயிற்சி மையம் தொடங்க துரித நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.இவ்வாறு அவர் பேசினார்.

மேலும் விழாவில் முன்னாள் அமைச்சர் துரைராமசாமி பள்ளிக்கு இலவசமாக 5¼ ஏக்கர் நிலம் வழங்கிய பள்ளியின் பெற்றோர் ஆசிரியர் சங்கத்தலைவர் எஸ்.நடராஜை பாராட்டி கல்வெட்டை திறந்து வைத்தார். முடிவில் கடந்த கல்வியாண்டில் எஸ்.எஸ்.எல்.சி, பிளஸ்-2 அரசு பொதுத்தேர்வில் முதல் 3 இடங்களை பெற்ற மாணவ-மாணவிகளுக்கும், பாடத்தில் 100 சதவீதம் வழங்கிய ஆசிரிய-ஆசிரியைகளுக் கும், விளையாட்டு, கலை இலக்கிய போட்டிகளில் மாநில, மாவட்ட அளவில் சாதனை புரிந்த மாணவ-மாணவிகளுக்கும் பரிசுகளும், சான்றிதழ்களும் வழங்கப்பட்டன.மேலும் மத்திய அரசு கொண்டு வரும் ‘நீட்’ உள்பட பல்வேறு தேர்வுகளை தமிழகத்தில் உள்ள மாணவர்கள் மிக எளிதில் எதிர்கொண்டு வெற்றி பெறுவதற்கு 100 ‘நீட்’ பயிற்சி மையங்கள் தொடங்கப்பட்டுள்ளது. மேலும் அடுத்த ஆண்டு முதல் ஆரம்பகல்வி, உயர்நிலைக்கல்வி, மேல்நிலைக்கல்வி படிக்கும் மாணவ- மாணவிகளுக்கு 3 வகையான சீருடைகள் அறிமுகப்படுத்தப்பட உள்ளது.

தமிழகத்தில் 3 ஆயிரம் அரசு பள்ளிகளுக்கு 6-ம் வகுப்பில் ஸ்மார்ட் கிளாஸ் தொடங்குவதற்கு ரூ.60 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. மேலும் தமிழகத்தில் கற்றல் குளறுபடியுள்ள 10 சதவீத மாணவர்களுக்கும் கல்வி நன்கு மனதில் பதியும் வண்ணம் கற்பிக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. தமிழகத்தில் 10 ஆயிரம் அரசு பள்ளிகளில் பணிபுரியும் 1 லட்சம் ஆசிரியர்களுக்கு கற்றல் திறன் மேம்பாட்டு பயிற்சி இந்த ஆண்டு முதல் அளிக்கப்படும். தமிழகத்தில் அரசு பள்ளிகளில் பயிலும் மாணவர்கள் பிளஸ்-2 முடித்தவுடன் வேலை வாய்ப்பு பெற அரசு மூலம் நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.விழாவில் முன்னாள் எம்.எல்.ஏக்கள் என்.எஸ்.என்.நடராஜ், செல்விமுருகேசன், மாவட்ட வருவாய் அதிகாரி பிரசன்னாராமசாமி, மாவட்ட கல்வி அலுவலர் சித்ரா, பேரூராட்சி முன்னாள் தலைவர் எம்.செல்வநாயகிமுத்துக்குமார், ஒன்றியக்குழு முன்னாள் துணைத்தலைவர் முருகவேல் என்கிற ஏ.எஸ்.ராமலிங்கம், சிவ்பார்வதி மன்றாடியார் கல்விக்குழுமங்களின் செயலாளர் எஸ்.நவீன்மன்றாடியார், முன்னாள் மாணவர்கள் சங்கத்தலைவர் எஸ்.குப்புச்சாமி, தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கத்தலைவர் ஜோதிகுருசாமி, காங்கேயம் துணை போலீஸ் சூப்பிரண்டு கிருஷ்ணசாமி, தாசில்தார் மாணிக்கவேலு, தலைமை ஆசிரியர் எம்.நரேந்திரன் மற்றும் ஆசிரிய-ஆசிரியைகள், மாணவ- மாணவிகள், முன்னாள் மாணவர்கள் சங்க நிர்வாகிகள், உறுப்பினர்கள், பெற்றோர் பலர் கலந்து கொண்டனர். முடிவில் பள்ளியின் முன்னாள் மாணவர் பி.முத்துக்குமார் நன்றி கூறினார்.

Friday, 12 January 2018

சட்டு'ன்னு 'சிட்டா' கிடைக்குது! ● இனி, அலைந்து திரிய வேண்டியதில்லை ● இணைய தளத்தில் பெற கட்டணமில்லை

திருப்பூர்:நிலத்தின் 'சிட்டா' மற்றும் புல வரைபடத்துக்காக, அலைந்து திரிய வேண்டிய தில்லை; கட்டணமின்றி, எளிதாக பெறலாம் என்று,வருவாய்த்துறை தெரிவித்துள்ளது.திருப்பூர் மாவட்டத்தில், மூன்று வருவாய் கோட்டங்கள்; ஒன்பது தாலுகா, 35 வருவாய் உள்வட்டங்கள், 350 வருவாய் கிராமங்கள் உள்ளன; 25 லட்சத்துக்கும் அதிகமான மக்கள் வசிக்கின்றனர். வருவாய்த்துறையின் ஒரு பிரிவாக இயங்கும் நில அளவைத்துறை, விவசாயிகள் மற்றும் பொதுமக்களுடன் நேரடி தொடர்பில் இருக்கிறது.நிலம் தொடர்பான அனைத்து பரிவர்த்தனைகளும், நில அளவை பிரிவு மூலமாக நடக்கிறது.பட்டா நிலவிவரங்கள் தொகுக்கப்பட்டு, கம்ப்யூட்டரில் பதிவேற்றம் செய்யப்பட்டு, 15 ஆண்டுகளாகவே சிட்டா, அடங்கல் விவரம், கம்ப்யூட்டர் மூலமாக வழங்கப்பட்டு வருகிறது.இந்நிலையில், பதிவேடுகளாக மட்டுமே உள்ள நில ஆவணங்களை தொகுத்து, கம்ப்யூட்டரில் பதிவு செய்து பயன்படுத்த அரசு திட்டமிட்டது.அதன்படி, நிலம் தொடர்பான விவரம், கம்ப்யூட்டரில் பதிவேற்றம் செய்யப்பட்டது. தற்போது திருப்பூர் தெற்கு, பல்லடம், அவிநாசி தாலுகாவில் உள்ள அனைத்து விவரங்களும், கம்ப்யூட்டரில் பதிவு செய்யப்பட்டுள்ளது. பட்டா -சிட்டா மற்றும் புலவரைபடம் ஆகிய சேவையை, நில உடமையாளர்கள் இணையதளம் வாயிலாக எளிய முறையில் பெறமுடியும்.இதில், 'www.eservices.tn.gov.in' என்ற இணையதளம் வாயிலாக, மாவட்டம், தாலுகா, வருவாய் கிராம விவரங்களையும்; நிலத்தின் பட்டா எண் அல்லது க.ச., எண்ணை பதிவு செய்தால், சிட்டா, உரிமையாளர் விவரத்தையும், நிலத்தின் வரைபடத்தையும்பார்வையிடலாம்.வருவாய்த்துறை, சர்வே பிரிவு அலுவலகங்களுக்கு செல்லாமலேயே, எளிய முறையில் சிட்டா, அடங்கல் மற்றும் புலவரைபட விவரங்களை, 'பார் கோடு' தொழில்நுட்பத்துடன் பதிவிறக்கம் செய்ய கொள்ளலாம்.இதுகுறித்து நில அளவைப்பிரிவு அதிகாரிகள் கூறுகையில், 'இணையதளம் வாயிலாக புலவரைபடம் பெறும் திட்டத்தை, கடந்த வாரம் தமிழக முதல்வர் துவக்கி வைத்தார். இதுவரை, கட்டணம் செலுத்தி, கம்ப்யூட்டர் சிட்டா பெறப்பட்டது.இனி, செலவே இல்லாமல் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். கம்ப்யூட்டர் தேவையில்லை; நவீன மொபைல் போன்களிலேயே, ஒரு நொடியில் விவரங்களை பெறலாம். திருப்பூர் தெற்கு, அவிநாசி, பல்லடம் தாலுகாக்களில், முதல் கட்டமாக இணையதளம் வாயிலாக, நில விவரங்களை பெறும் வசதி அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.மற்ற தாலுகாக்களில், நில விவரங்கள் பதிவேற்றம் பணி முடிந்ததும்,இத்திட்டம் அமலாகும்,' என்றனர்.

திருப்பூர் மாவட்டத்தில், ஒரேநாளில் ரஜினி மக்கள் மன்றத்தில் 2¾ லட்சம் விண்ணப்பங்கள் வினியோகம்

ஜனவரி 12, 2018, 04:15 AM
திருப்பூர்,

திருப்பூர் மாவட்ட தலைமை ரஜினி மக்கள் மன்றம் சார்பில் உறுப்பினர் சேர்க்கை விண்ணப்பம் வழங்கும் விழா நேற்று காலை திருப்பூர் பார்க் ரோட்டில் உள்ள ஸ்ரீராகவேந்திரர் கோவிலில் சிறப்பு பூஜையுடன் தொடங்கியது. விழாவுக்கு தலைவர் மேகநாதன் தலைமை தாங்கினார். செயலாளர் ரவிக்குமார், பொருளாளர் சந்திரமோகன், கவுரவ தலைவர் யாஷ் கணேசன், துணைத் தலைவர்கள் சதீஷ்குமார், ராஜ்குமார், துணைச்செயலாளர்கள் ராம்குட்டி, சிவலிங்கம், ஆலோசகர்கள் சந்திரன், ஸ்ரீகாந்த் ஆகியோர் கலந்துகொண்டனர்.திருப்பூர் மாவட்டத்தில் ஒரேநாளில் ரஜினி மக்கள் மன்றத்தில் உறுப்பினர் சேர்க்கைக்கு 2¾ லட்சம் விண்ணப்பங்கள் வினியோகம் செய்யப்பட்டது. கல்லூரி மாணவ-மாணவிகள் ஆர்வமுடன் விண்ணப்பங்களை வாங்கி சென்றார்கள்.இதைத்தொடர்ந்து குஜராத் திருமண மண்டபம் அருகில் சிவசுப்பிரமணிய செட்டியார் வீதியில் உள்ள மன்ற அலுவலகத்தில் விண்ணப்பங்கள் தொடர்ந்து வழங்கப்பட்டது. ஆண், பெண் பனியன் தொழிலாளர்கள், கல்லூரி மாணவ- மாணவிகள், ரஜினிகாந்த் ரசிகர்கள் ஆர்வமுடன் வந்து விண்ணப்பங்களை வாங்கி சென்றார்கள். அனைவருக்கும் விண்ணப்பங்கள் இலவசமாக வழங்கப்பட்டது.விண்ணப்பத்தில் உறுப்பினராக சேர விரும்புபவரின் பெயர், பிறந்த தேதி, வயது, மின்னஞ்சல், முகவரி, கிராமம், வார்டு, ஊராட்சி, நகர பஞ்சாயத்து, நகராட்சி, மாநகராட்சி, ஒன்றியம், மாவட்டம், தாலுகா, வாக்காளர் அடையாள அட்டை எண், செல்போன் எண் ஆகியவற்றை குறிப்பிடுமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் ரஜினிகாந்த் ரசிகர் மன்ற உறுப்பினராக இருந்தால் மன்றத்தின் பதிவு எண் விவரம், ஏதேனும் கட்சியில் உறுப்பினராக இருந்தால் அந்த கட்சியின் பெயர், பரிந்துரைப்பவரின் பெயர், மன்றத்தின் பெயர், பதிவு எண், மன்ற விலாசம், செல்போன் எண் ஆகியவற்றை பூர்த்தி செய்து கையொப்பமிட்டு வழங்க வேண்டும்.அதுபோல் விதிமுறைகளாக, உறுப்பினர்கள் மன்றத்தின் நற்பெயருக்கு எந்தவித களங்கம் வராத வகையில் ஒழுக்கம் மற்றும் கட்டுப்பாட்டோடு நடக்க வேண்டும். மன்றத்தின் அறிவுரை, உத்தரவுகளுக்கு பணிந்து நடக்க வேண்டும். தலைமை மன்றத்தின் ஒப்புதல் இல்லாமல் யாரும் மன்ற நிர்வாக பொறுப்புகளை நியமிக்கக்கூடாது. தலைமை மன்றத்தின் முடிவே அனைத்துக்கும் இறுதியானது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.திருப்பூர் மாநகரில் 1¼ லட்சம் விண்ணப்பங்கள் நேற்று வழங்கப்பட்டுள்ளதாக நிர்வாகிகள் தெரிவித்தனர். இதுபோல் ஊத்துக்குளி, வெள்ளகோவில், தாராபுரம், பல்லடம், காங்கேயம், பொங்கலூர், உடுமலை, அவினாசி என மாவட்டம் முழுவதும் விண்ணப்பங்களை இளைஞர்கள், ரசிகர்கள் ஆர்வமுடன் வாங்கி சென்றார்கள். மாநகரம் மற்றும் மாவட்டத்தில் ஒரேநாளில் மொத்தம் 2¾ லட்சம் விண்ணப்பங்கள் வினியோகம் செய்யப்பட்டுள்ளதாக நிர்வாகிகள் தெரிவித்தனஇந்த நிகழ்ச்சியில் ஒன்றிய, நகர தலைமை ரஜினி மன்றங்களின் சார்பில் மனோகரன்(ஊத்துக்குளி), கார்த்திகேயன்(வெள்ளகோவில்), துரை கார்த்திகேயன்(தாராபுரம்), பாலகிருஷ்ணன்(பல்லடம்), செல்வன்(காங்கேயம்), மயில்சாமி(பொங்கலூர்), அப்துல் சலீம்(உடுமலை), சுந்தரம்(அவினாசி) உள்ளிட்ட நிர்வாகிகள் திரளாக கலந்து கொண்டனர்.

Thursday, 11 January 2018

பழனி கோயிலில் சிறப்பு தரிசன வருவாய் ரூ.8 கோடி

பழனி தண்டாயுதபாணி சுவாமி கோயிலின் டிசம்பர் மாத பூஜை மற்றும் தரிசன கட்டண வருவாய் ரூ. 8 கோடியை நெருங்கியது. பஞ்சாமிர்தம் ரூ.4.70 கோடிக்கு விற்பனையாகியுள்ளது.
     மலைக்கோயிலில் சிறப்பு தரிசனம், காலபூஜை, புதுக்கணக்கு, தங்கத்தொட்டில் போன்றவற்றுக்கு கட்டணம் வசூலிக்கப்படுகிறது. இதில் கடந்த டிசம்பர் மாதம் திருக்கோயிலுக்கு ரூ. 7 கோடியே 92 லட்சத்து 59 ஆயிரத்து 176 கிடைத்துள்ளது. கடந்த ஆண்டுஇதே மாதத்துடன் ஒப்பிடும்போது 93 லட்சம் அதிகமாகும். அதே போல, தங்கத்தேர் புறப்பாட்டுக்கு ரூ. 2000 கட்டணமாக பெறப்படுகிறது. டிசம்பர் மாதத்தில் 2,179 பேர் தங்கத்தேர் புறப்பாடு செய்துள்ளனர். இதன் மூலமாக ரூ. 43 லட்சத்து 58 ஆயிரம் கிடைத்துள்ளது. மேலும், பஞ்சாமிர்தம் விற்பனை மூலம் ரூ. 4 கோடியே 70 லட்சத்து 33 ஆயிரத்து 610 கிடைத்துள்ளது. இது கடந்த ஆண்டைக் காட்டிலும் 38 லட்சம் அதிகமாகும்.
 கடந்த டிசம்பர் மாதம் கார்த்திகையை முன்னிட்டு முருக பக்தர்கள் மற்றும் ஐயப்ப பக்தர்கள் அதிக அளவில் வந்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் முக்கிய பொறுப்பை ஏற்கிறார் குட்டி தல சுரேஷ் ரெய்னா..!

சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் துணை கேப்டனாக குட்டி தல சுரேஷ் ரெய்னா நியமிக்கப்படவுள்ளார்.

இந்தியாவில் வரும் 2008ம் ஆண்டு முதல் ஆண்டுதோறும் மிகப்பிரமாண்டமாக நடத்தப்படும் உள்ளூர் டி.20 தொடரான ஐ.பி.எல் டி.20 தொடர் இந்த ஆண்டு, வரும் ஏப்ரல் மாத இறுதியில் துவங்க உள்ளது.

https://kingkingunitv.blogspot.com

ஐ.பி.எல் தொடரின் துவக்கத்தில் இருந்தே மற்ற அணிகளுக்கு சிம்ம சொப்பமானமாக திகழ்ந்த தமிழகத்தின் செல்லப்பிள்ளையான தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, கடந்த 2014ம் ஆண்டு சூதாட்ட புகாரில் சிக்கி சர்ச்சையை ஏற்படுத்தியது.

Wednesday, 10 January 2018

இன்று முதல் 3 நாட்களுக்கு தினமும் ரூ.1 சம்பளத்தில் அரசு பஸ்களை இயக்க முடிவு

போக்குவரத்து தொழிலாளர்களின் வேலைநிறுத்தம் காரணமாக போதிய பஸ் இல்லாமல் பொதுமக்கள் சிரமத்தை சந்தித்துள்ளனர். பனியன் தொழில் நிறுவனங்கள் நிறைந்த திருப்பூரில் வெளிமாவட்ட தொழிலாளர்கள் தங்கி அதிகம் பேர் பணியாற்றி வருகிறார்கள். பொங்கல் பண்டிகையை கொண்டாட தொழிலாளர்கள் தங்கள் சொந்த ஊருக்கு செல்லும் வகையில் எங்களால் முடிந்த உதவியை செய்யும் நோக்கத்துடன், எங்கள் சங்கத்தின் டிரைவர்களை கொண்டு அரசு பஸ்களை இயக்க நாங்கள் முடிவு செய்துள்ளோம்.அதன்படி எங்கள் சங்கத்தின் கீழ் உள்ள டிரைவர்கள் முதல்கட்டமாக 25 பேர் நாளை(இன்று) முதல் 13–ந் தேதி வரை அரசு பஸ்களை இயக்க உள்ளனர். அரசு போக்குவரத்து கழகம் சார்பில் எங்கள் டிரைவர்களுக்கு தினமும் ரூ.1 சம்பளம் வழங்கினால் போதும். எங்கள் சங்கத்தின் டிரைவர்கள் முறையாக லைசென்சு உள்ளிட்டவை வைத்துள்ளனர். அரசு போக்குவரத்து திருப்பூர் பணிமனை அதிகாரிகளிடம் பேசியுள்ளோம். நாளை(இன்று) முதல் அரசு பஸ்களை எங்களுடைய டிரைவர்கள் இயக்க உள்ளனர். சேவை மனப்பான்மையுடன் நாங்கள் இதை செய்கிறோம்.இதுபோல் திருப்பூரில் உள்ள அனைத்து சங்கங்களும் முன் வந்து முடிந்த அளவுக்கு தகுதியுள்ள டிரைவர்களை கொடுத்து, அரசு பஸ்களை இயக்கி தொழிலாளர்கள் சொந்த ஊர் செல்வதற்கு உதவியாக இருக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறோம்.

இவ்வாறு அவர் கூறினார்.

பேட்டியின் போது சங்கத்தின் செயலாளர் நடராஜன் உடனிருந்தார்.
kingkingunitv.blogspot.com

Tuesday, 9 January 2018

திருப்பூரில் தற்காலிக டிரைவர் ஓட்டிச்சென்ற அரசு பஸ் மோதி தி.மு.க. நிர்வாகி காயம்

ஜனவரி 10, 2018, 04:15 AM
திருப்பூர்,

ஊதிய உயர்வு உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கடந்த 4–ந் தேதி முதல் அரசு போக்குவரத்து தொழிலாளர்கள் வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள். இதனால் பொதுமக்கள் போதிய பஸ் வசதியில்லாமல் பாதிக்கப்பட்டு வருகிறார்கள். பொதுமக்களின் வசதிக்காக தற்காலிக டிரைவர்கள் மற்றும் கண்டக்டர்களை கொண்டு அரசு பஸ்கள் இயக்கப்பட்டு வருகிறது.

திருப்பூர் அரசு போக்குவரத்து கழகத்தின் 2 பணிமனைகளிலும் தற்காலிக டிரைவர், கண்டக்டர்களை கொண்டு அரசு பஸ்கள் பெரும்பாலும் இயக்கப்பட்டு வருகின்றன.திருப்பூரில் தற்காலிக டிரைவர் ஓட்டிச்சென்ற அரசு பஸ் மோதி தி.மு.க. நிர்வாகி காயமடைந்தார். இதைக்கண்டித்து சாலைமறியலில் ஈடுபட்டவர்களால் பரபரப்பு ஏற்பட்டதுகாயம் ஏற்பட்டது. தங்கமணி நல்லூர் பகுதி தி.மு.க. நிர்வாகி ஆவார். இந்த சம்பவத்தை கேள்விப்பட்டதும் தி.மு.க. நிர்வாகிகள் அங்கு திரண்டனர். பின்னர் விபத்தை ஏற்படுத்திய தற்காலிக டிரைவரை கண்டித்து தி.மு.க.வினர் செல்லாண்டியம்மன் துறையில் இருந்து காங்கேயம் ரோடு செல்லும் ரோட்டில் அமர்ந்து திடீர் மறியலில் ஈடுபட்டனர்.

சம்பவம் பற்றி அறிந்ததும் திருப்பூர் தெற்கு போலீஸ் இன்ஸ்பெக்டர் தென்னரசன் மற்றும் போலீசார் விரைந்து வந்து சாலைமறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார்கள்.நேற்று காலை திருப்பூர் நல்லூரை சேர்ந்த பழனிச்சாமி என்பவர் தற்காலிக டிரைவராக அரசு போக்குவரத்து கழக பணிமனையில் நியமிக்கப்பட்டார். பின்னர் சோதனை ஓட்டமாக திருப்பூரில் இருந்து சேவூர் செல்லும் டவுன் பஸ்சை பழனிச்சாமி ஓட்டி வந்தார். காலை 11 மணி அளவில் செல்லாண்டியம்மன் துறை அருகே வந்தபோது பஸ்சை திருப்ப முயன்றுள்ளதாக கூறப்படுகிறது. அப்போது அந்த வழியாக சந்திராபுரத்தை சேர்ந்த தங்கமணி(வயது 48) ஓட்டி வந்த ஸ்கூட்டரில் பஸ் மோதியது. இதில் பஸ்சின் அடியில் கிடந்து தங்கமணி சத்தம்போட்டதால் பஸ்சை நிறுத்தி விட்டு டிரைவர் அங்கிருந்து ஓட்டம் பிடித்தார். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

இந்த விபத்தில் தங்கமணியின் கன்னத்தில் காயம் ஏற்பட்டது. மேலும் கை, கால்களிலும்காயமடைந்த தங்கமணியை உடனடியாக அங்கிருந்து மீட்டு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இதைத்தொடர்ந்து மறியலை கைவிட்டு அனைவரும் அங்கிருந்து கலைந்து சென்றனர். இதன்காரணமாக 10 நிமிடம் அங்கு போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

விபத்தை ஏற்படுத்திய அரசு பஸ் சம்பவ இடத்திலேயே நின்றது. இதைத்தொடர்ந்து அங்கு வந்த தெற்கு போலீஸ் சப்–இன்ஸ்பெக்டர் சாம் ஆல்பர்ட், அரசு டவுன் பஸ்சில் ஏறி டிரைவர் இருக்கையில் அமர்ந்து பஸ்சை அங்கிருந்து போலீஸ் நிலையத்துக்கு ஓட்டிச்சென்றார். சீருடையில் இருந்த போலீஸ் அதிகாரி அரசு பஸ்சை ஓட்டிச்சென்ற சம்பவத்தை அப்பகுதி மக்கள் பார்த்து, தற்காலிக டிரைவர்களை தொடர்ந்து போலீஸ் அதிகாரியும் அரசு பஸ்சை ஓட்டி செல்லும் நிலை ஏற்பட்டுள்ளது என்று கூறினார்கள்.தி.மு.க.வினர் சாலை மறியலில் ஈடுபட்டபோது அந்த வழியாக மற்றொரு அரசு பஸ்சை தற்காலிக டிரைவர் ஒருவர் ஓட்டி வந்தார். அந்த பஸ் அருகே சென்ற கார் மீது உரசியதில் காரின் பக்கவாட்டு கண்ணாடி உடைந்து நொறுங்கியது. அதே பகுதியில் மற்றொரு அரசு பஸ்சை தற்காலிக டிரைவர் ஓட்டிச்சென்றார். அந்த பஸ், வளம் பாலம் ரவுண்டானாவில் மோதியது. இதில் பஸ்சின் வலதுபுற பின்பக்க சக்கரம் அருகே சேதமடைந்தது. பஸ்சில் இருந்த பயணிகள் யாருக்கும் காயமில்லை. இதைத்தொடர்ந்து பஸ் அங்கிருந்து புறப்பட்டு சென்றது. அரசு பஸ்சை இயக்குவதில் தற்காலிக டிரைவர்களுக்கு சிரமம் இருப்பதால் இதுபோன்ற விபத்துகள் ஏற்படுவதாக பொதுமக்கள் தெரிவித்தனர்https://kingkingunitv.blogspot.com

Monday, 8 January 2018

இந்தியா மொபைல் நிறுவனமான ஸ்மார்ட்ரான் தற்போது புதிய 5000 எம்.ஏ.எச் பேட்டரி திறனுடன் கூடிய பட்ஜெட் மொபைல் ஒன்றை அறிமுகப்படுத்தி உள்ளது. இந்த போன் ஆனது பல சறப்பு அம்சங்களுடன் வெளிவரும் என அந்த நிறுவனத்தின் தலைவர்கள் கூறியுள்ளனர். இந்த மொபைலானது அண்ட்ராய்டு 7.1 நோகட் அடிப்படையிலான இயங்கு தளத்தில் வெளிவரும் என தெரிகிறது. இந்த மொபைல் சீன, கொரியா நிறுவனங்களின் பல மொபைல் மாட்லகளுக்கு மிக போட்டியாக இருக்கும் என தெரிகிறது. முக்கியமாக ஜியோமி நிறுவனத்தின் பங்கை குறி வைத்து இந்த மொபைல் வெளிவரும் என தெரிகிறது.டி.போன் பி :

இந்த மொபைலானது 32 ஜி.பி உள்ளடக்க நினைவத்தை கொண்டுள்ளது. மேலும் எஸ்.டி கார்டு மூலம் 128 ஜி.பி வரை இதை அதிகரிக்க முடியும். இந்த போனில் 5.5 இன்ச் முழு எச்.டி டிஸ்பிளே கொண்ட மொபைல். இந்த போனின் அனைத்து முக்கிய சென்சார்களும் இருக்கினறது. இந்த போனின் முக்கிய அம்சமாக இந்த மொபைலின் 5000 எம்ஏஎச் பேட்டரி கொண்டுள்ளது. அதனால் இந்த போனின் சார்ஜ் 2 நாள் வரை தாக்கு பிடிக்கும் என தெரிகிறதுவிலை (எதிர்பார்ப்பு):
இந்த டி.போன் பி ஸ்மார்ட்போன் மாடல் ரூ.9000- விலையில் வெளிவரும் எனத் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது, மேலும் பல்வேறு எதிர்பார்ப்புகளை உருவாக்கியுள்ளது இந்த ஸ்மார்ட்போன் மாடல். இந்த போனின் கேமாரா செல்பி பிரியர்களுக்கு உகந்ததாக இருக்கும் என தகவல் வெளியாகியுள்ளது
https://kingkingunitv.blogspot.com

Sunday, 7 January 2018

இந்த வருட IPL ஏலத்தில் இந்த 5 வீரர்களுக்கு தான் கடும் போட்டி

இந்த வருட IPL போட்டியை உலகமே எதிர்பார்க்கும் நிலையில் இந்த வருடத்தில் இந்த 5 வீர்களை வாங்க போட்டி பலமாக இருக்கும்.

5.குர்னால் பாண்டியா:
 கடந்த இரண்டு வருடமாக மும்பை இந்தியன்ஸ் அணிக்காக விளையாடி வருகிறார். இவரை அந்த அணி தக்கவைத்துக்கொள்ளும் என எதிர்பார்க்கப்பட்டது.

ஆனால் அவர்கள் ரோகித்,இவருடைய தம்பி பாண்டிய மற்றும் பும்ராவை நீட்டித்து கொண்டனர். கடந்த வருடம் மும்பை அணிக்காக 240ரன்களும் 10 விக்கெட்டும் எடுத்துள்ளார். அவருடைய பவுலிங் சராசரி 06.82. சிறந்த ஆல் ரவுண்டர் என்பதால் அவரை எடுப்பதற்கு கடும் போட்டி நிலவும்
 கடந்த வருடம் சன் ரைரசஸ் அணிக்காக விளையாடிய ஆப்கானிஸ்தான் வீரர். இக்கட்டான நிலையில் அந்த அணிக்கு கடந்த வருடம் விக்கெட் வேட்டை நடத்தினார்.

கடந்த வருடம் விளையாடிய 14போட்டியில் 17விக்கெட் வீழ்த்தினார். இவரின் சரசரி 06.62. இவரின் சிறப்பான ஆட்டத்தை பார்த்த ஆஸ்திரேலியாவில் நடக்கும் பிக்பேஸ் போட்டியில் அடிலெயிடு அணிக்கா ஒப்பந்தம் செய்யப்பட்டார்
 கடந்த வருடம் தோல்பட்டை காயம் காரணமாக RCB அணியில் இவர் விளையாடவில்லை. 9வது IPLலில் இவரது அதிரடி காரணமாக RCB பைனல் வரை சென்றது. அந்த ஆண்டு 14போட்டியில் 397ரன்கள் விளாசினர். இவருடைய ஸ்டைக் ரேட்146.49 மற்றும் சராசரி 44.11. சிக்ஸர் அடிப்பதில் திறமையானவர் அதுவும் அதிக தூரம் அடிப்பதில். இவரை வாங்க கடும் போட்டி நிலவும் பட்சத்தில் RCB இவரை வாங்க முயற்ச்சிக்கும்.
.KL ராகுல்கhttps://kingkingunitv.blogspot.comவெஸ்ட் இண்டிஸ் அணியின் ஆல்ரவுண்டர் CSK அணிக்காக பல வெற்றிகளை பெற்று தந்தார். பவுலிங்,பேட்டிங்,பீல்டிங் என அனைத்திலும் சிறந்து விளங்க கூடியவர். சுலோ பவுலிங் போடுவதில் கில்லாடி. இந்த வருட ஏலத்தில் இவருக்கு தான் மவுசு அதிகம்.இதுவரை 106 IPL போட்டியல் 122விக்கெட் எடுத்துள்ளார். சராசரி 16.52.சஹால்டந்த ஆண்டு அதிக விக்கெட் எடுத்த லெக் ஸ்பின்னார்.11 போட்டியில் 23விக்கெட் RCB அணிக்காக எடுத்தார்.2014 ஆண்டு இவரை வெறும் 10லட்சத்திற்கு வாங்கப்பட்டார். 2015 ஆண்டு அதிக விக்கெட் எடுத்தவர்கள் பட்டியலில் 3வது இடைத்தையும்.2016ஆண்டு 2வது இடத்தை பிடித்தார். இவரின் திறமையை பார்த்த கிரிகெட் வாரியும் இந்திய அணி இடம் கொடுத்தது.இவரையும் ஏலத்தில் எடுக்க கடம் போட்டி 8

விவசாயிகளிடம் கிலோ ரூ.1.50க்கு கொள்முதல் : விலை வீழ்ச்சியால் சாலையில் கொட்டப்பட்ட தக்காளி

சத்தியமங்கலம்: தக்காளி விலை வீழ்ச்சியால் வேதனையடைந்த விவசாயிகள் திம்பம் மலைப்பாதையில் கொட்டிச்சென்றனர். ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலத்தை அடுத்த தாளவாடி மலைப்பகுதியில் உள்ள 50 கிராமங்களில் அதிகளவில் தக்காளி பயிரிடப்படுகிறது. இங்கு விளையும் தக்காளி சத்தியமங்கலம், கோபி, ஈரோடு, திருப்பூர், கோவை, மேட்டுப்பாளையம், பொள்ளாச்சி உள்ளிட்ட பகுதிகளில் உள்ள தினசரி காய்கறி மார்க்கெட்டிற்கு விற்பனைக்கு கொண்டு செல்லப்படுகிறதுதற்போது தக்காளி அதிக அளவில் பயிரிடப்பட்டுள்ளதாலும், விளைச்சல் அதிகரித்த காரணத்தாலும் கடுமையாக விலை வீழ்ச்சியடைந்துள்ளது. காய்கறி மார்க்கெட்டில் கிலோ ரூ.5 க்கு விற்பனையாகும் தக்காளியை வியாபாரிகள் விவசாயிகளிடம் ரூ.1.50 முதல் ரூ.2 வரை விலை கொடுத்து கொள்முதல் செய்கின்றனர். இதனால் தக்காளி பயிரிட்ட விவசாயிகள் கடுமையான நஷ்டத்திற்கு ஆளாகியுள்ளனர்.
https://kingkingunitv.blogspot.coml
செடியிலிருந்து தக்காளியை பறிப்பதற்கு கூலி கொடுக்க முடியாமல் தவித்து வரும் விவசாயிகள் தாங்களே நேரடியாக கொண்டு விற்பனை செய்யலாம் என முடிவெடித்து சரக்கு ஆட்டோவில் தக்காளியை விற்பனை செய்வதற்காக கோவை மற்றும் திருப்பூர் மார்க்கெட்டிற்கு நேற்று கொண்டு சென்றனர். ஆனால் அங்கு எதிர்பார்த்த விலை கிடைக்காததாலும் தக்காளியை வாங்க ஆளில்லாததாலும் கொண்டுசென்ற தக்காளியை திம்பம் மலைப்பாதை 3-வது கொண்டைஊசி வளைவு அருகே குரங்குகளுக்கு உணவாக கொட்டிச்சென்றனர்

Saturday, 6 January 2018

வறட்சி நிவாரணமாக திருப்பூருக்கு ரூ.11 கோடி வந்தது! வங்கி மூலம் விடுவிக்க நடவடிக்கை

பதிவு செய்த நாள்: ஜன 07,2018 05:20


திருப்பூர்:திருப்பூர் மாவட்டத்துக்கு, வறட்சி நிவாரணமாக, 10.85 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது; இது விரைவில், விவசாயிகளின் வங்கி கணக்கு மூலம் விடுவிக்கப்படும் என்று, அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
திருப்பூர் மாவட்டத்தில், 2016ம் ஆண்டில் மழை பொய்த்து, கடும் வறட்சி நிலவியது. 1.04 லட்சம் எக்டர் பயிர்சாகுபடி பாதிக்கப்பட்டது.தமிழக அரசு, 134.32 கோடி ரூபாய் நிவாரணமாக அறிவித்தது. மாவட்டத்தில், 1,20,674 விவசாயிகள் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், வறட்சி நிவாரணம் வழங்கப்படும் எனவும், மாவட்ட நிர்வாகம் அறிவித்தது.
நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டதை தொடர்ந்து, விவசாயிகளின் வங்கி கணக்கு வாயிலாக நிவாரணம் விடுவிக்கப்பட்டதுகணக்கெடுப்பு சரியாக நடக்காததால், நிவாரண உதவி கிடைக்கவில்லை என, விவசாயிகள் முறையிட்டனர். பல்வேறு குளறுபடி நடந்துள்ளதால், நிவாரண உதவி கிடைக்கவில்லை என, தென்னை விவசாயிகள் போராட்டம் நடத்தினர். இதையடுத்து, மீண்டும் கள ஆய்வு நடத்தி, விடுபட்ட தென்னை விவசாயிகளுக்கு, நிவாரணம் பெற்றுத்தரப்படும் என்று, மாவட்ட நிர்வாகம் உறுதி அளித்தது.
அதன்படி, வறட்சியால் பாதிக்கப்பட்ட தென்னை மற்றும் மா பயிரிட்டிருந்த விவசாயிகள் விவரம் சேகரிக்கப்பட்டது; விடுபட்ட விவசாயிகளிடம் இருந்து விண்ணப்பம் பெறப்பட்டு, அரசுக்கு மாவட்ட நிர்வாகம் கருத்துரு அனுப்பியது.வருவாய்த்துறை, நிதித்துறை.பரிசீலனை முடிவுகள் அடிப்படையில், திருப்பூர் மாவட்டத்தில் வறட்சியால் பாதிக்கப்பட்ட, 6,097 விவசாயிகளுக்கு, தற்போது, 10.85 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது.
டி.ஆர்.ஓ., பிரசன்னா ராமசாமி கூறுகையில்,
""இரண்டாம் கட்டமாக நடந்த ஆய்வில், 50 சதவீதத்துக்கும் அதிகமாக பாதித்த தென்னை, மா விவசாயிகள் கண்டறியப்பட்டனர். மொத்தம், 6,032 எக்டர் பாதிக்கப்பட்டுள்ளதாக, நிவாரணம் கோரப்பட்டது.""பாதிக்கப்பட்ட, 6,097 விவசாயிகளுக்கு, 10.85 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது. வருவாய் கோட்டம் வாரியாக, விவசாயிகள் வங்கி கணக்கு விவரம் சரிபார்ப்பு பணி துவங்கியுள்ளது. விரைவில், நிவாரணத்தொகை விடுவிக்கப்படும்,'' என்றார்.
https://kingkingunitv.blogspot.com

அறுவடை செய்ய கூலி பல மடங்கு அதிகரிப்பு:சோளம் விதைத்த விவசாயிகள் கவலை

சோளத்தட்டு அறுவடைக்கு, தொழிலாளர்கள் கூலி பலமடங்கு அதிகரித்துள்ளதால், சோளப்பயிரை கால்நடை மேய்ச்சலுக்கு பயன்படுத்த வேண்டிய நிலைக்கு, விவசாயிகள் தள்ளப்பட்டுள்ளனர்.மக்காச்சோளம், 23 ஆயிரத்து, 482 எக்டரிலும், கம்பு, 57 எக்டரிடலும் சாகுபடி செய்யப்பட்டிருந்தது. தேசிய வேலை உறுதி திட்டத்தால், விவசாய பணிகளுக்கு தொழிலாளர் கிடைப்பது அரிதாகிவிட்டது. சோளப்பயிர் நன்கு வளர்ந்திருந்தாலும், தாமதமாக விதைத்த சோளப்பயிர்களுக்கு வடகிழக்கு பருவ மழை கை கொடுக்கவில்லை. இதனால், குறைவான உயரம் மட்டுமே வளர்ந்துள்ளன. தை மாதத்துக்கு பின்,துவங்கும் சோளப்பயிர் அறுவடை, இந்தாண்டு மார்கழி துவக்கத்திலேயே ஆரம்பமாகிவிட்டது. அறுவடை துவங்கியுள்ள நிலையில், தொழிலாளர்களின் தினக்கூலி பல மடங்கு உயர்ந்ததால், விவசாயிகள் கடும் அதிர்ச்சி அடைந்துள்ளனர். ஆண்கள், 600 ரூபாயும், பெண்கள், 450 ரூபாயும் தினக்கூலி கேட்கின்றனர். வேறுவழியின்றி, கூடுதல் செலவு செய்து, சோளப்பயிர் அறுவடை நடக்கிறது. இதனால், சோளத்தட்டு விலையும், பல மடங்கு உயர்ந்துவிட்டது.இந்நிலையில், குறைவான உயரத்தில் வளர்ந்த சோளத்தட்டுக்கு கிராக்கி இருக்காது என்பதாலும், அதிக கூலி கொடுக்க முடியாமலும், கால்நடைகளுக்கு மேய்ச்சல் நிலமாக மாற்றியுள்ளனர். தேசிய வேலை உறுதி திட்ட பணியாளர்களை,https://kingkingunitv.blogspot.comவிவசாயப்பணிக்கு பயன்படுத்தும் வகையில், அரசு சட்ட திருத்தம் செய்தால் மட்டுமே, பெரும் நஷ்டத்தில் இருந்து தப்பிக்க முடியுமென, சிறு, குறு விவசாயிகள் தெரிவித்துள்ளனர்.- நமது நிருபர் --

பெருந்துறையில் எய்ம்ஸ் மருத்துவமனை வேண்டும்! - மத்திய அமைச்சரிடம் மனு கொடுத்த திருப்பூர் எம்.பி

டெல்லியில் மத்திய சுகாதாரத் துறை அமைச்சர் ஜே.பி நட்டாவை நேரில் சந்தித்த திருப்பூர் மக்களவை உறுப்பினர் சத்யபாமா, தமிழகத்தில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைவது குறித்த மனு ஒன்றை வழங்கியிருக்கிறார். அதில், “ஜெயலலிதா முதல்வராக இருந்தபோது தமிழகத்திற்கு எய்ம்ஸ் மருத்துவமனை தேவை என்று மத்திய அரசிடம் வலியுறுத்தப்பட்டது. அதனைத்தொடர்ந்து தமிழகத்தில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைப்பதற்காக மாநிலம் முழுவதும் 5 இடங்கள் தேர்வு செய்யப்பட்டன. அதில்பெருந்துறையும் ஒன்று.

    kingkinguniTv.blogspot.in

தற்போதுபெருந்துறையில் 327 ஏக்கர்
பரப்பளவில் மருத்துவக் கல்லூரி ஒன்று அமைந்துள்ளது. பொதுமக்கள் அனைவரும் வெகு சுலபமாக வந்துசேரும் வகையில் இந்த இடம் அமைந்திருக்கிறது. பெருந்துறையில் எய்ம்ஸ் மருத்துவமனை அமையும்பட்சத்தில் தமிழகத்தின் மேற்கு மண்டலத்தைச் சேர்ந்த சுமார் 2 கோடி பேர் பயன்பெற முடியும். மேலும் அண்டை மாநிலங்களான கேரளா, கர்நாடகா பகுதி மக்களும் மருத்துவ வசதிகளைப் பெற வாய்ப்பாக அமையும். மருத்துவ வசதிகளுக்கான தேவை அதிகரித்து வரும் இக்காலத்தில், உயர்தர மருத்துவ வசதிகள்கொண்ட எய்ம்ஸ் மருத்துவமனை பெருந்துறையில் அமைந்தால் கொங்கு மண்டல மக்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும். எனவே வரவிருக்கும்குடியரசு தின விழாவையொட்டி, எய்ம்ஸ் மருத்துவமனையை பெருந்துறையில் அமைப்பதற்கான உத்தரவை மத்திய அரசு வெளியிட வேண்டும்” என்று தெரிவித்திருக்கிறார்.

தாராபுத்தில் தனியார் பேருந்து மோதி பள்ளி மாணவி பலி

https://kingkingunitv.blogspot.in


ஜன. 4 –
தாராபுரம் அருகே இருசக்கர வாகனத்தில் பள்ளிக்கு வந்து கொண்டிருந்த மாணவர்கள் மீது தனியார் பஸ்மோதிய விபத்தில் சம்பவஇடத்திலேயே ப்ளஸ் 2 மாணவி பலியானார். ஒருமாணவர் மற்றும் ஒருமாணவி படுகாயமடைந்தனர்.

தாராபுரம் அடுத்துள்ள கோனேரிபட்டியை சேர்ந்தவர் விவசாயி மனோகரன். இவரது மகள் தாரணி (17) தாராபுரம் சர்ச்ரோட்டில் உள்ள அரசு உதவி பெறும் பள்ளியில் ப்ளஸ் 2 பயின்று வருகிறார். அதே ஊரை சேர்ந்த புள்ளிச்சாமி மகள் காவ்யா (16),

Friday, 5 January 2018

திருப்பூர் மாவட்டத்தில் பெரும்பாலான அரசு பஸ்கள் ஓடாததால் பயணிகள் அவதி

ஜனவரி 06, 2018, 03:30 AM
திருப்பூர்,

தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழக ஊழியர்களுக்கான ஊதிய ஒப்பந்தம் தொடர்பாக போக்குவரத்து துறை அமைச்சர் மற்றும் அதிகாரிகளுடன் நடத்திய பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்து விட்டதாக கூறி நேற்று முன்தினம் இரவு முதல் அரசு பஸ் டிரைவர்கள், கண்டக்டர்கள் வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். திருப்பூர் மாவட்டம் முழுவதும் நேற்று முன்தினம் முதல் அரசு பஸ்கள் பெரும்பாலும் இயக்கப்படவில்லை.திருப்பூர் மாவட்டத்தில் போக்குவரத்து ஊழியர்கள் வேலைநிறுத்தம் காரணமாக பெரும்பாலான அரசு பஸ்கள் ஓடாததால் பயணிகள் அவதியடைந்தனர். இதன்காரணமாக தனியார் பஸ்கள் நேற்று பயணிகள் கூட்டத்தால் நிரம்பி வழிந்தது.திருப்பூரில் டவுன் பஸ்கள் மட்டும் குறைந்த அளவில் இயக்கப்பட்டன. இதனால் திருப்பூர் பழைய பஸ் நிலையம், புதிய பஸ் நிலையங்களில் பயணிகள் கூட்டம் அதிகமாக இருந்தது. ஆனால் போதிய அரசு பஸ்கள் இல்லாமல் பஸ் நிலையங்கள் வெறிச்சோடி காணப்பட்டன. இதைத்தொடர்ந்து தனியார் பஸ்கள், மினிபஸ்கள் அதிக அளவில் இயக்கப்பட்டன. வழக்கமாக இயங்கும் தனியார் பஸ்களை விட, சுற்றுலா செல்லும் பஸ்களையும் வழித்தடங்களில் நேற்று இயக்கப்பட்டன. டவுன் பஸ்கள் பெருமளவு இயக்கப்படாததால் கிராமப்புறத்தை சேர்ந்தவர்கள் திருப்பூர் வருவதற்கும், திருப்பூரில் இருந்து கிராமத்துக்கு செல்வதற்கும் பெரிதும் சிரமம் அடைந்தார்கள்திருப்பூர் மாவட்டத்தில் திருப்பூரில் 2 பணிமனைகளும், பல்லடம், காங்கேயம், தாராபுரம், உடுமலை ஆகியவற்றில் தலா ஒரு பணிமனையும் என 6 பணிமனைகள் உள்ளன. இந்த பணிமனைகளில் பணியாற்றும் போக்குவரத்து ஊழியர்கள் நேற்று பெரும்பாலானவர்கள் பணிக்கு வரவில்லை. இதனால் டிரைவர், கண்டக்டர் இல்லாமல் அரசு பஸ்களை இயக்குவதில் சிக்கல் ஏற்பட்டது. அரசு பஸ்கள் பணிமனை வளாகத்திலேயே நிறுத்தி வைக்கப்பட்டன. பிரச்சினைகள் எதுவும் ஏற்படாமல் தடுக்கும் வகையில் பணிமனைகளுக்கு முன்பு பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது.அரசு பஸ்கள் ஓடாததால் பொதுமக்கள் வெளியூர் செல்வதை தவிர்த்தனர். இதன்காரணமாக காலை 10 மணிக்கு மேல் பஸ் நிலையங்களில் பயணிகளின் கூட்டம் வழக்கத்தை விட குறைவாக காணப்பட்டது. திருப்பூர் ரெயில் நிலையத்தில் நேற்று பயணிகள் கூட்டம் அதிகமாக காணப்பட்டது. கோவை, ஈரோடு, கரூர் மாவட்டத்தை சேர்ந்தவர்கள் அதிகம் பேர் ரெயிலில் பயணம் செய்தனர். அதுபோல் வெளிமாவட்ட பயணிகளும் ரெயில் போக்குவரத்தை நம்பியே இருந்தனர்.இதைத்தொடர்ந்து திருப்பூரில் இருந்து சுற்றுப்புற பகுதிகளில் உள்ள கிராமங்களுக்கு தனியார் வேன், கார் போன்றவை இயக்கப்பட்டன. இதற்காக மக்களிடம் அதிகமாக பயணக்கட்டணத்தை அவர்கள் வசூலித்தனர். அதுபோல் சேலம், மதுரை, திருச்சி, திண்டுக்கல், கரூர், தஞ்சாவூர், திருநெல்வேலி, செங்கோட்டை, தூத்துக்குடி போன்ற வெளியூர்களுக்கும் மிக குறைந்த அளவில்தான் பஸ்கள் இயக்கப்பட்டன. இதன்காரணமாக வெளிமாவட்ட மக்கள் மிகவும் சிரமம் அடைந்தனர்.இதுபோல் திருப்பூர் மாவட்டம் முழுவதும் பெரும்பாலான அரசு பஸ்கள் ஓடவில்லை. தனியார் பஸ்கள், மினிபஸ்கள் தான் அதிக அளவில் இயக்கப்பட்டன. இருப்பினும் உரிய நேரத்தில் பஸ் வசதியில்லாமல் பொதுமக்கள் தவித்தனர். கிராமப்புறங்களை சேர்ந்தவர்கள் பஸ் கிடைக்காமல் நீண்ட நேரமாக பஸ் நிலையங்களில் காத்திருந்ததை காண முடிந்தது. மாவட்டத்தில் 6 பணிமனைகளில் இருந்து 458 பஸ்கள் இயக்கப்படுகிறது. நேற்று 150 பஸ்கள் இயக்கப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர். 70 சதவீதம் பஸ்கள் ஓடவில்லை.வேலைநிறுத்தம் குறித்து அரசு போக்குவரத்து கழக திருப்பூர் மண்டல அதிகாரிகள் கூறும்போது, திருப்பூர் மாவட்டத்தில் அரசு பஸ்களை இயக்குவதற்கு தினக்கூலி அடிப்படையில் தற்காலிக டிரைவர், கண்டக்டர்கள் பணிக்கு அமர்த்தப்பட்டனர். அவர்கள் மூலமாக பஸ்கள் இயக்கப்பட்டன. திருப்பூர், பல்லடம், காங்கேயம் பணிமனைகளில் தற்காலிக டிரைவர், கண்டக்டர் மூலமாக அரசு பஸ்கள் இயக்கப்பட்டன.

கனரக லைசென்சு பெற்ற தனியார் பள்ளி பஸ் டிரைவர் மற்றும் கண்டக்டர்கள் பணிக்கு வந்திருந்தனர். இவர்களுக்கு ஒரு ஷிப்டுக்கு ரூ.255 சம்பளமாக வழங்கப்பட்டது.https://kingkingunitv.blogspot.inஅரசு போக்குவரத்து கழக ஊழியர்கள் வேலைநிறுத்தம் காரணமாக அரசு பஸ்களின் இயக்கம் முற்றிலும் முடங்கிப்போனது. இதைத்தொடர்ந்து திருப்பூர் மண்டலத்துக்கு உட்பட்ட அரசு பணிமனைகளில் பணியாற்ற தற்காலிக டிரைவர், கண்டக்டர்கள் தேவைப்படுகிறார்கள். தகுதியுள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம் என்று மண்டல அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

அதன்படி தகுதியுள்ளவர்கள் திருப்பூர் பணிமனை 1, 2 மற்றும் பல்லடம், காங்கேயம், தாராபுரம், பழனி பணிமனை 1, 2, உடுமலை பணிமனை கிளை மேலாளரை தொடர்பு கொள்ளலாம் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.அரசு பஸ்களை இயக்கும் வகையில் தற்காலிக டிரைவர், கண்டக்டர்களை அதிகப்படியாக பணிக்கு அமர்த்த திட்டமிட்டுள்ளோம் என்றனர். திருப்பூர் மாவட்டம் முழுவதும் அரசு பஸ்கள் பெரும்பாலும் ஓடாததால் நேற்று பயணிகள் பெரிதும் அவதியடைந்தனர்.

போக்குவரத்து ஊழியர்கள் வேலைநிறுத்த போராட்டம் காரணமாக அரசு பஸ்களை இயக்குவதில் சிரமம் ஏற்பட்டது. இருப்பினும் இருக்கின்ற டிரைவர், கண்டக்டர்களை கொண்டு அந்தந்த பணிமனைகளில் இருந்து அரசு பஸ்களை வெளியே எடுத்துச்செல்ல அதிகாரிகள் உத்தரவிட்டனர். அதன்படி டவுன் பஸ்களை பணிமனையில் இருந்து எடுத்து வந்த டிரைவர், கண்டக்டர்கள், அந்த பஸ்களை பஸ் நிலையங்களில் நிறுத்தி விட்டு ஆங்காங்கே நின்று கொண்டனர். இதனால் பணிமனையை விட்டு வெளியே வந்த அரசு பஸ்களும் முழு அளவில் இயக்கப்படவில்லை.

Thursday, 4 January 2018

காலை 8 மணிக்கு மிகவும் கூட்டமாக இருக்கும் தாராபுரம் பேருந்து நிலையம் தற்போது அரசு பேருந்துகள் இயங்காததால் வெறிச்சோடி காணப்படுகிறது








சிஎஸ்கே-யில் டோனி: எந்தெந்த அணி யார் யாரை தக்க வைத்துள்ளது- முழு விவரங்கள்

 தற்போது அனைத்து வீரர்களையும் மறு ஏலம் விடவேண்டும் என்ற கோரிக்கை எழுந்தது. இதனால் ஒவ்வொரு அணியும் மூன்று வீரர்களை நேரடியாக தக்க வைத்துக் கொள்ளலாம். மற்ற இரண்டு பேரை ஏலத்தின்போது தக்கவைத்துக் கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டது.

கடந்த இரண்டு சீசனில் சென்னை சூப்பர் கிங்ஸ், ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் விளையாடவில்லை.இந்திய கிரிக்கெட் வாரியத்தால் தொடங்கப்பட்ட ஐபிஎல் டி20 லீக் தொடர் மாபெரும் வெற்றியை பெற்று சர்வதேச அளவில் முன்னணி தொடராக விளங்கி வருகிறது. ரசிகர்களின் பேராதரவோடு 10 ஆண்டுகளை சிறப்பாக முடித்துள்ளது. இந்த வருடம் 11-வது வருத்தில் காலடி எடுத்து வைக்க இருக்கிறது. இதற்கு முன் ஒவ்வொரு அணியும் ஐந்து வீரர்களை தக்கவைத்துக் கொள்ளலாம் என்ற விதிமுறை இருந்தது.ஐபிஎல் 2018-க்கான சீசனில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி டோனி, ரெய்னா மற்றும் ஜடேஜா ஆகியோரை தக்கவைத்துள்ளது. #IPL2018 #IPLRetention
 . இதனால் குஜராத் லயன்ஸ், ரைசிங் புனே சூப்பர் ஜெயன்ட் அணி பங்கேற்றன. 2018 சீசனில் இந்த இரண்டு அணிகளும் பங்கேற்காது. வீரர்களின் ஏலம் வருகிற 27-ந்தேதி மற்றும் 28-ந்தேதிகளில் நடக்கிறது. இதற்கு முன் எந்தெந்த அணி யார் யாரை தக்கவைத்துள்ளது என்பதை இன்று மாலைக்குள் சமர்பிக்க வேண்டும் என்று கூறப்பட்டிருந்தது. தற்போது அதிகாரப்பூர்வமாக தக்கவைக்கப்பட்ட வீரர்கள் பட்டியலில் வெளியிடப்பட்டுள்ளது
 குஜராத் லயன்ஸ், ரைசிங் புனே சூப்பர் ஜெயன்ட் விளையாடியவர்களில் டோனி, ரெய்னா மற்றும் ஜடேஜா ஆகியோரை சென்னை சூப்பர் கிங்ஸ் அணி தக்கவைத்துக் கொண்டது. டோனியை முதல் நபராகவும், ரெய்னாவை 2-வது நபராகவும், ஜடேஜாவை 3-வது நபராகவம் தக்கவைத்துக் கொண்டது.
 ராஜஸ்தான் ராயல்ஸ் அணி ஸ்டீவ் ஸ்மித்தை மட்டும் தகவைத்துக் கொண்டுள்ளது. வேறு யாரையும் அந்த அணி தக்கவைக்கவில்லை.

ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி முதல் நபராக விராட் கோலியையும், 2-வது நபராக டி வில்லியர்ஸையும், 3-வது நபராக இளம் வீரரான சர்பராஸ் கானையும் தக்கவைத்துள்ளது
 மும்பை இந்தியன்ஸ் அணி ரோகித் சர்மா, பும்ரா, ஹர்திக் பாண்டியா ஆகியோரை தக்கவைத்துள்ளது.
https://kingkingunitv.blogspot.inபஞ்சாப் அணி அக்சார் பட்டேல்-ஐ மட்டுமே தக்கவைத்துள்ளது.ஐதராபாத் அணி வார்னர், புவனேஸ்வர் குமார் ஆகியோரை தக்கவைத்துள்ளது.கொல்கத்தா சுனில் நரைன் மற்றும் அந்த்ரே ரஸல் ஆகியோரை தக்கவைத்துள்ளது. காம்பீரை தக்கவைக்கவில்லை.கொல்கத்தா சுனில் நரைன் மற்றும் அந்த்ரே ரஸல் ஆகியோரை தக்கவைத்துள்ளது. காம்பீரை தக்கவைக்கவில்லை.டெல்லி அணி கிறிஸ் மோரிஸ், ரிஷப் பந்த், ஷ்ரேயாஸ் அய்யர் ஆகியோரை தக்கவைத்துக் கொண்டது.

*ரஜினியின் சொத்து மதிப்பு வெளியீடு : இவ்வளவு இருக்கா?!*

நடிகர் ரஜினிகாந்த் அரசியலுக்கு வருவதை தனது ரசிகர்களுடனான சந்திப்பின் போது உறுதி செய்துள்ளார். அதற்கான வேலைகளில் தீவிரமாக இறங்கி உள்ளார். நேற்று மாலை திமுக தலைவர் கருணாநிதியை சந்தித்தித்து பேசினார். இன்று எம்.ஜி.ஆர் பேரவை தலைவர் ஆர்.எம்.வீரப்பனை சந்தித்தித்து பேசினார்
இந்நிலையில் பிரபலங்களின் சொத்து மதிப்பை கணக்கிட்டு சொல்லும் பின்-ஆப் ரஜினியின் சொத்து மதிப்பு, அவரது வாகனங்கள், அவர் கட்டிய வரி என அனைத்தையும் கணக்கிட்டு வெளியிட்டுள்ளது.

அதில் ரஜினியின் சொத்து மதிப்பு ரூ.360 கோடி எனவும், அவர் சென்ற ஆண்டு கட்டிய வரி மட்டும் ரூ.13 கோடி எனவும் தெரிவித்துள்ளது. மேலும் அவரிடம் ரேன்ஜ் ரோவர், பெண்ட்லி, இன்னோவா ஆகிய கார்கள் உள்ளன
இதன் மதிப்பு ரூ.2.5 கோடி எனவும் தெரிவித்துள்ளது. இவை அனைத்தும் ரஜினிகாந்தின் பெயரில் வரும் சொத்துக்கள், கணக்குகள், நிறுவனங்கள் மூலமாக கிடைக்கும் வருவாய் அடிப்படையிலானது. இதில் அவரது குடும்பத்தில் இருக்கும் நபர்களின் பெயரில் உள்ள சொத்துக்கள் கணக்குகள் இதில் அடங்காது எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

Wednesday, 3 January 2018


மூலனூர் அருகே வீட்டிற்குள் கார் புகுந்த விபத்தில் காரில் பயணம் செய்த விவசாயி பலியானார். இந்த விபத்தில் மேலும் 3 பேர் படுகாயம் அடைந்தனர்.கரூர் மாவட்டம் எரவநாயக்கன்பட்டியை சேர்ந்தவர் சுப்பிரமணி (வயது 75). விவசாயம் செய்து வந்தார். இவருக்கு உடல் நலம் சரியில்லாததால் இவருடைய உறவினரான பாலுச்சாமி (40) என்பவர் தனது காரில், சுப்பிரமணியை திருப்பூர் மாவட்டம் தாராபுரம் அரசு ஆஸ்பத்திரிக்கு காரில் அழைத்து சென்றார். அந்த காரில் பாலுச்சாமியின் தந்தை பழனிசாமி (70) மற்றும் தாயார் செல்லாத்தாள் (60) ஆகியோரும் சென்றனர்.தாராபுரம் அரசு ஆஸ்பத்திரியில் சுப்பிரமணிக்கு சிகிச்சை முடிந்ததும் அதே காரில் 4 பேரும் எரவநாயக்கன்பட்டிக்கு திரும்பி வந்து கொண்டிருந்தனர். காரை பாலுச்சாமி ஓட்டினார். டிரைவரின் இருக்கை அருகே பழனிசாமி அமர்ந்து இருந்தார். பின் இருக்கையில் சுப்பிரமணியும், செல்லாத்தாளும் அமர்ந்து இருந்தனர்.மூலனூர் காரையூர் காளியம்மன் கோவில் அருகே கார் வந்து கொண்டிருந்தது. அப்போது எதிரே மற்றொரு வாகனம் சென்று கொண்டிருந்தது. அந்த வாகனத்திற்கு வழி விடுவதற்காக பாலுச்சாமி, சாலையின் ஓரமாக காரை திருப்பினார். அப்போது திடீரென்று டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த கார், சாலையோரத்தில் இருந்த வீட்டிற்குள் புகுந்தது.

இதனால் வீட்டின் சுவர் இடிந்து விழுந்தது. இந்த விபத்தில் காரில் பயணம் செய்த 4 பேரும் பலத்த காயம் அடைந்தனர். உடனே அருகில் இருந்தவர்கள் அவர்களை மீட்டு தாராபுரம் அரசுhttps://kingkingunitv.blogspot.in/?m=1ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு சுப்பிரமணியை பரிசோதனை செய்த டாக்டர்கள், வரும் வழியிலேயே அவர் இறந்து விட்டதாக தெரிவித்தனர். மேலும் இந்த விபத்தில் பலத்த காயம் அடைந்த பாலுச்சாமி, பழனிசாமி மற்றும் செல்லாத்தாள் ஆகியோருக்கு முதலுதவி சிகிச்சைஅளித்த பின்னர் மேல் சிகிச்சைக்காக கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லப்பட்டனர்.

அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சைஅளிக்கப்பட்டு வருகிறது. இந்த விபத்துகுறித்து மூலனூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். மேலும் வீட்டின் மீது கார் மோதிய போது அந்த வீட்டில் யாரும் இல்லை. இதனால் பெரியஅளவில் உயர் சேதம் தவிர்க்கப்பட்டது.

பல்லடம் அருகே நிட்டிங் எந்திரத்தில் சிக்கிய இளம்பெண் சாவு


பல்லடம் அருகே பணியின்போது நிட்டிங் எந்திரத்தில் சிக்கிய இளம்பெண் தலை நசுங்கி பரிதாபமாக உயிரிழந்தார்.
ஜனவரி 04, 2018, 04:00 AM

பொங்கலூர்

திருச்சி  ஸ்ரீரங்கத்தை சேர்ந்தவர் ஆதிமூலம். இவருடைய மனைவி பாப்பாத்தி. இவர்களது மகள் புவனேஸ்வரி (வயது 20). இவர் திருப்பூர் பல்லடம் ரோடு, சின்னக்கரையில் உள்ள ஒரு தனியார் நிட்டிங் நிறுவனத்தில் கடந்த 20 நாட்களாக வேலை செய்து வந்தார். இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு பணியில் இருந்தபோது நிட்டிங் எந்திரத்தின் அருகே சென்று அதனுள் விழுந்த ஒரு பொருளை எடுக்க முற்பட்டுள்ளார். அப்போது புவனேஸ்வரியின் தலை நிட்டிங் எந்திரத்தில் சிக்கிக்கொண்டது. இதனால் அவர் அலறினார்.

சத்தம் கேட்டு அருகில் இருந்தவர்கள் ஓடிவந்து எந்திரத்தை நிறுத்தினர். பின்னர் தலையில் பலத்த அடிப்பட்டு உயிருக்கு போராடிக்கொண்டிருந்த புவனேஸ்வரியை எந்திரத்தில் இருந்து மீட்டனர். ஆனால் எந்திரத்திற்குள் சிக்கியதால் புவனேஸ்வரியின் தலை முற்றிலும் நசுங்கிப்போனது. உடனடியாக ஆம்புலன்ஸ் மூலம் பல்லடம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் அங்கு அவரை பரிசோதனை டாக்டர்கள் புவனேஸ்வரி ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்துள்ளனர். http://brisktopia.com/4fEcஇதுகுறித்து புவனேஸ்வரியின் பெற்றோருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. மருத்துவமனைக்கு வந்த புவனேஸ்வரியின் பெற்றோர் புவனேஸ்வரியின் உடலை பார்த்து கதறி அழுதனர். புவனேஸ்வரிக்கு இன்னும் திருமணம் ஆகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

விபத்து குறித்து பல்லடம் போலீசார் வழக்குப்பதிவு செய்து மேற்கொண்டு விசாரணை நடத்தி வருகிறார்கள். மேலும் நிட்டிங் நிறுவனத்தின் நிர்வாகத்தினர் பணியாளர்களுக்கு போதிய பாதுகாப்பு வழங்காத நிட்டிங் நிறுவனத்தின் உரிமையாளர் ஜெயக்குமார்(40) மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Monday, 1 January 2018

மீண்டும் வந்த நோக்கியா... சீறிப்பாய்ந்த ரெட்மி... மொபைல் நிறுவனங்களுக்கு 2017 எப்படி?

புதுப்புது தொழில்நுட்பங்கள், மொபைல்களின் வடிவமைப்பில் ஏற்பட்ட மிகப்பெரிய மாற்றம் என கடந்த 2017- ல் டிஜிட்டல் உலகில் நிறைய மாற்றங்கள். ஃபுல் வியூ டிஸ்ப்ளே, டூயல் கேமரா, விர்ச்சுவல் ரியாலிட்டி மற்றும் விர்ச்சுவல் அசிஸ்டென்ட் என வழக்கத்தை விட கடந்த வருடம் பல மடங்கு வேகத்தில் அப்டேட்டானது எல்லா ஸ்மார்ட்போன்களும். அப்படி உலக அளவில் பிரபலமாக இருக்கும் ஸ்மார்ட்போன் நிறுவனங்கள் கடந்த வருடம் அடைந்த வளர்ச்சிகளும் சறுக்கல்களும் இதோ.


KingKinguniTv.blogspot.comஎப்பொழுதும் போலவே உலக அளவில் அதிக மொபைல்களை விற்பனை செய்து கடந்த வருடமும் முதலிடத்தை தக்க வைத்திருந்தது சாம்சங். இன்ஃபினிட்டி டிஸ்ப்ப்ளே, டூயல் கேமரா என தனது ஸ்மார்ட்போன்களின் வடிவமைப்பில் பெரிய அளவில் மாற்றத்தைக் கொண்டு வந்தது கடந்த வருடத்தில்தான். விர்ச்சுவல் அசிஸ்டென்ட்டான பிக்ஸ்பியையும் அறிமுகப்படுத்தியிருந்தார்கள்.

தாராபுரம் சர்ச் ரோட்டில் போக்குவரத்து காவலர் நியமனம்

தாராபுரம், ஜன.11 – தீக்கதிர் செய்தி எதிரொலியான தாராபுரம் சர்ச் ரோட்டில் போக்குவரத்து காவலர் மீண்டும் நியமனம் செய்யப்பட்டுள்ளார். தாராபுரம்...