சத்தியமங்கலம்: தக்காளி விலை வீழ்ச்சியால் வேதனையடைந்த விவசாயிகள் திம்பம் மலைப்பாதையில் கொட்டிச்சென்றனர். ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலத்தை அடுத்த தாளவாடி மலைப்பகுதியில் உள்ள 50 கிராமங்களில் அதிகளவில் தக்காளி பயிரிடப்படுகிறது. இங்கு விளையும் தக்காளி சத்தியமங்கலம், கோபி, ஈரோடு, திருப்பூர், கோவை, மேட்டுப்பாளையம், பொள்ளாச்சி உள்ளிட்ட பகுதிகளில் உள்ள தினசரி காய்கறி மார்க்கெட்டிற்கு விற்பனைக்கு கொண்டு செல்லப்படுகிறதுதற்போது தக்காளி அதிக அளவில் பயிரிடப்பட்டுள்ளதாலும், விளைச்சல் அதிகரித்த காரணத்தாலும் கடுமையாக விலை வீழ்ச்சியடைந்துள்ளது. காய்கறி மார்க்கெட்டில் கிலோ ரூ.5 க்கு விற்பனையாகும் தக்காளியை வியாபாரிகள் விவசாயிகளிடம் ரூ.1.50 முதல் ரூ.2 வரை விலை கொடுத்து கொள்முதல் செய்கின்றனர். இதனால் தக்காளி பயிரிட்ட விவசாயிகள் கடுமையான நஷ்டத்திற்கு ஆளாகியுள்ளனர்.
https://kingkingunitv.blogspot.coml
செடியிலிருந்து தக்காளியை பறிப்பதற்கு கூலி கொடுக்க முடியாமல் தவித்து வரும் விவசாயிகள் தாங்களே நேரடியாக கொண்டு விற்பனை செய்யலாம் என முடிவெடித்து சரக்கு ஆட்டோவில் தக்காளியை விற்பனை செய்வதற்காக கோவை மற்றும் திருப்பூர் மார்க்கெட்டிற்கு நேற்று கொண்டு சென்றனர். ஆனால் அங்கு எதிர்பார்த்த விலை கிடைக்காததாலும் தக்காளியை வாங்க ஆளில்லாததாலும் கொண்டுசென்ற தக்காளியை திம்பம் மலைப்பாதை 3-வது கொண்டைஊசி வளைவு அருகே குரங்குகளுக்கு உணவாக கொட்டிச்சென்றனர்

No comments:
Post a Comment