Saturday, 6 January 2018

வறட்சி நிவாரணமாக திருப்பூருக்கு ரூ.11 கோடி வந்தது! வங்கி மூலம் விடுவிக்க நடவடிக்கை

பதிவு செய்த நாள்: ஜன 07,2018 05:20


திருப்பூர்:திருப்பூர் மாவட்டத்துக்கு, வறட்சி நிவாரணமாக, 10.85 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது; இது விரைவில், விவசாயிகளின் வங்கி கணக்கு மூலம் விடுவிக்கப்படும் என்று, அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
திருப்பூர் மாவட்டத்தில், 2016ம் ஆண்டில் மழை பொய்த்து, கடும் வறட்சி நிலவியது. 1.04 லட்சம் எக்டர் பயிர்சாகுபடி பாதிக்கப்பட்டது.தமிழக அரசு, 134.32 கோடி ரூபாய் நிவாரணமாக அறிவித்தது. மாவட்டத்தில், 1,20,674 விவசாயிகள் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், வறட்சி நிவாரணம் வழங்கப்படும் எனவும், மாவட்ட நிர்வாகம் அறிவித்தது.
நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டதை தொடர்ந்து, விவசாயிகளின் வங்கி கணக்கு வாயிலாக நிவாரணம் விடுவிக்கப்பட்டதுகணக்கெடுப்பு சரியாக நடக்காததால், நிவாரண உதவி கிடைக்கவில்லை என, விவசாயிகள் முறையிட்டனர். பல்வேறு குளறுபடி நடந்துள்ளதால், நிவாரண உதவி கிடைக்கவில்லை என, தென்னை விவசாயிகள் போராட்டம் நடத்தினர். இதையடுத்து, மீண்டும் கள ஆய்வு நடத்தி, விடுபட்ட தென்னை விவசாயிகளுக்கு, நிவாரணம் பெற்றுத்தரப்படும் என்று, மாவட்ட நிர்வாகம் உறுதி அளித்தது.
அதன்படி, வறட்சியால் பாதிக்கப்பட்ட தென்னை மற்றும் மா பயிரிட்டிருந்த விவசாயிகள் விவரம் சேகரிக்கப்பட்டது; விடுபட்ட விவசாயிகளிடம் இருந்து விண்ணப்பம் பெறப்பட்டு, அரசுக்கு மாவட்ட நிர்வாகம் கருத்துரு அனுப்பியது.வருவாய்த்துறை, நிதித்துறை.பரிசீலனை முடிவுகள் அடிப்படையில், திருப்பூர் மாவட்டத்தில் வறட்சியால் பாதிக்கப்பட்ட, 6,097 விவசாயிகளுக்கு, தற்போது, 10.85 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது.
டி.ஆர்.ஓ., பிரசன்னா ராமசாமி கூறுகையில்,
""இரண்டாம் கட்டமாக நடந்த ஆய்வில், 50 சதவீதத்துக்கும் அதிகமாக பாதித்த தென்னை, மா விவசாயிகள் கண்டறியப்பட்டனர். மொத்தம், 6,032 எக்டர் பாதிக்கப்பட்டுள்ளதாக, நிவாரணம் கோரப்பட்டது.""பாதிக்கப்பட்ட, 6,097 விவசாயிகளுக்கு, 10.85 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது. வருவாய் கோட்டம் வாரியாக, விவசாயிகள் வங்கி கணக்கு விவரம் சரிபார்ப்பு பணி துவங்கியுள்ளது. விரைவில், நிவாரணத்தொகை விடுவிக்கப்படும்,'' என்றார்.
https://kingkingunitv.blogspot.com

No comments:

Post a Comment

தாராபுரம் சர்ச் ரோட்டில் போக்குவரத்து காவலர் நியமனம்

தாராபுரம், ஜன.11 – தீக்கதிர் செய்தி எதிரொலியான தாராபுரம் சர்ச் ரோட்டில் போக்குவரத்து காவலர் மீண்டும் நியமனம் செய்யப்பட்டுள்ளார். தாராபுரம்...